உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ.,வில் உட்கட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி முகாம்

பா.ஜ.,வில் உட்கட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி முகாம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.,வில் உட்கட்சி தேர்தலுக்கான பயிற்சி முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.,வில் கிளை தலைவர்களுக்கு வரும் நவ.,11- 30ம் தேதி வரையும், ஒன்றிய தலைவர்களுக்கு டிச.,1-7 ம் தேதி வரை உட்கட்சி தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி ஜெயகோவிந்த் திருமண மண்டபத்தில் உட்கட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு, மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். தேர்தல் பொறுப்பாளர் ஸ்ரீசந்த், இணை தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.முகாமில் சென்னை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பசுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் நேரு, சிறுபான்மை அணி செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்டத் துணைத் தலைவர்கள் சர்தார் சிங், கருணாகரன், கஜேந்திரன், சங்கர சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர்கள், சதீஷ்குமார், முருகன், ரமேஷ், கிருஷ்ணவேணி, வெண்ணிலா, உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், கலை கலாச்சார பிரிவு மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி