உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளி முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி  

மாற்றுத்திறனாளி முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி  

கள்ளக்குறிச்சி : மாற்றுத்திறனாளி முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தும் திட்டங்களை வீடுகளுக்கே சென்று சேர்க்கும் வகையில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சியிலும் இந்த ஆண்டு செயல்படுத்தப்படுகிறது. இதனையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அரசு நலத்திட்டங்கள், சேவை பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் 120 முன்களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு, களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு மூன்று நாட்களுக்கு நடந்தது. பயிற்சி வகுப்பினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இதில் மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கு சென்று விபரங்கள் கணக்கெடுப்பு, மென்பொருளில் பதிவேற்றம் செய்வது, அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவை பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி