உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சி : அனைத்து வகை ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த பயிற்சி முகாமிற்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளை சேர்மன் பொன்னரசு தலைமை தாங்கி, ஜே.ஆர்.சி., கொடி ஏற்றி வைத்தார். துணை சேர்மன் இளையபெருமாள், செயலாளர் இம்மானுவேல் சசிகுமார், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், பள்ளி முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.மாவட்ட அமைப்பாளர் மாயகண்ணன் வரவேற்றார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணுமூர்த்தி பங்கேற்று, பள்ளிகளில் ஜே.ஆர்.சி., மூலம் மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை வளர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். தலைமை ஆசிரியர் பெருமாள் கருத்தாளராக இருந்து பயிற்சி அளித்தார். முதலுதவி, உணவே மருந்து, பள்ளிகளில் ஜூனியர் ரெட் கிராஸ் துவங்குவதன் அவசியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.தொடர்ந்து, ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஜே.ஆர்.சி., நிர்வாகிகள் ஜேரோம், ஆறுமுகம், ஜானகிராமன், கண்ணன், ஜோஸ்பின், பள்ளி துணை முதல்வர் உலகநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர். இணை கன்வீனர் துரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை