வள்ளியம்மை கல்லுாரியில் பயிற்சி பட்டறை
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரி நுண்ணுயிரியல் துறை சார்பில், மின்புலத் துாள் நகர்ச்சி மூலம் மூலக்கூறு உயிரியலை ஆராய்தல்' என்ற தலைப்பின் கீழ் மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லுாரி தாளாளர் பூபதி தலைமை தாங்கினார். துறை பேராசிரியை பிரேமா வரவேற்றார். புதுச்சேரி டேர்ன் பயோடெக் நிறுவனர் உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். கல்லுாரி முதல்வர் தென்னரசி, துணை முதல்வர் ரீனா, அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.