உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காணை வி.இ.டி., கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா

காணை வி.இ.டி., கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா

திருக்கோவிலுார் : உலக பூமி தினத்தை முன்னிட்டு காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரி சார்பில் ஊர்வலம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி வளாகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை கல்லுாரி இயக்குநர் கார்த்தியராஜ் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.ஊர்வலத்தில் பேராசிரி யர்கள், பயிற்சி மாணவிகள், புவி வெப்பமயமாவதை தடுப்பது, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். ஊர்வலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முடிந்தது. அங்கு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் பொன்னன் மரக்கன்றுகள் நட்டார்.பேராசிரியர்கள் ஆறுமுகம், இளையபெருமாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். பேராசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை