உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விரியூர் இமாகுலேட் மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா

விரியூர் இமாகுலேட் மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த விரியூர் இமாகுலேட் மகளிர் கல்லுாரியில் சர்வதேச கிராமப்புர பெண்கள் தினம், உலக வறுமை தினம், தீபாவளி கொண்டாட்டம் என முப்பெரும் விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் பினியன் மேரி தலைமை தாங்கினார், பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். முதல்வர் லில்லி துவக்கவுரையாற்றினார். வள்ளலார் மன்ற பொருளாளர் முத்துகருப்பன், முத்தமிழ்ச்சங்க மாவட்ட தலைவர் முருககுமார், வணிகர் சங்க செயலாளர் குசேலன், முத்தமிழ்ச்சங்க துணைத்தலைவர் காயத்ரி வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் சுங்கம் மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையர் (ஓய்வு) சண்முகசுந்தரம், மாணவிகள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். தமிழ், வணிகவியல் மற்றும் ஆங்கிலத்துறை மாணவிகளின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மாணவிகள் ராஜேஸ்வரி, ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினர். மாணவி அஜிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ