உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலம் கமிட்டியில் மஞ்சள் ஏலம்: விவசாயிகளுக்கு அழைப்பு

சின்னசேலம் கமிட்டியில் மஞ்சள் ஏலம்: விவசாயிகளுக்கு அழைப்பு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மஞ்சள் ஏலம் வரும் 24ம் தேதி முதல் அனைத்து திங்கட்கிழமைகளிலும் நடக்க உள்ளதாக விழுப்புரம் விற்பனைக்குழு செயலாளர் சந்துரு தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில், சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மஞ்சள் ஏலம் அனைத்து திங்கட்கிழமைகளிலும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சேலம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர். நடப்பாண்டில், மஞ்சள் அறுவடை துவங்கி உள்ளதால் வரும், 24ம் தேதி திங்கள் முதல் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் சின்னசேலம் கமிட்டியில் நடத்தப்படும்.விவசாயிகள், மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு, மஞ்சளை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார உதவி தோட்டக்கலை இயக்குநர், வேளாண் வணிக அலுவலர் மற்றும் சின்னசேலம் கமிட்டி கண்காணிப்பாளரை, 89259 02926 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.விவசாயிகள் அதிக அளவில் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் இத்திட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் கமிட்டிகளிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை