மேலும் செய்திகள்
மது விற்ற நபர் கைது
22-Nov-2024
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பூட்டை மணி ஆற்றங்கரை பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, பூட்டை கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ்,24; மற்றும் செல்வம் மகன் வினித்குமார்,22; ஆகிய இருவரும் கஞ்சா விற்றது தெரிந்தது. இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து 2 கிலோ கஞ்சா வாங்கி வந்து சங்கராபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதில், விக்னேஷ் பொறியியல் பட்டதாரி. வினித்குமார் 10ம் வகுப்பு படித்துள்ளார். இதையடுத்து, கஞ்சா விற்ற இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை சங்கராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
22-Nov-2024