உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

கள்ளக்குறிச்சி: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மற்றும்மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:மாவட்டத்தில் 10,ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, அதற்கும் மேலாக படித்து விட்டு வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து, கடந்த, 31,ம் தேதியன்று, 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித் தொகை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் வரும், ஜூன்.30,ம் தேதி, 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்இருத்தல் வேண்டும்.விண்ணப்ப படிவங்களை, வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் https://employmentexchange.tn.gov.inஎன்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் 30ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில்நேபால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை