உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊரணி பொங்கல் திருவிழா 

ஊரணி பொங்கல் திருவிழா 

சங்கராபுரம் : பரமநத்தம் தீப்பாஞ்சாலி அம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நடந்தது.சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தில் உள்ள தீப்பாஞ்சாலி அம்மன், மதுரைவீரன், மாயவன் கோவில்களில் ஊரணி பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு சக்தி அழைத்தலும், அதனைத்தொடர்ந்து ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை பரமனத்தம் கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி