உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் படுகாயமடைந்தார். அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பியை சேர்ந்தவர் இளந்தமிழன், 30; இவர், செந்துறையில் இருந்து சென்னை மணலி நோக்கி வேன் ஓட்டி சென்றார். நேற்று மதியம் 2:15 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த பெரியகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சென்டர் மீடியன் மீது, மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த செந்துறையை சேர்ந்த சுரேஷ், 22; காயமடைந்தார். அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருநாவலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை