மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம்
16-May-2025
சின்னசேலம்: சின்னசேலம் வாசவி வனிதா கிளப் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சின்னசேலம் வாசவி மஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, வாசகி கிளப் சங்க தலைவர் வேல்மணி தலைமை தாங்கினார். வாசவி நிர்வாகிகள் பரணிகுமார், ரமேஷ், ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். ஜெய்ஸ்ரீ வரவேற்றார்.முன்னதாக வாசவி வனிதா கிளப் பன்னாட்டு தலைவர் இருகுள்ளா ராமகிருஷ்ணனுக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து சிறுபாக்கம் முதியோர் இல்லத்திற்கு கட்டில் மற்றும் அம்மையகரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மேலும் சங்க வளர்ச்சி, சேவை பணிகளுக்கு உதவிய அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
16-May-2025