உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காய்கறி விதை, பழம், பயறு தொகுப்புகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது

காய்கறி விதை, பழம், பயறு தொகுப்புகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு, பழத்தொகுப்பு மற்றும் பயறு தொகுப்பு ஆகியவற்றிக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படவுள்ளது.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு :தமிழகம் முழுவதும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் மூலம் தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரை ஆகிய ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய காய்கறி விதை தொகுப்பு, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய பழத்தொகுப்பு மற்றும் வேளாண்மை துறையிலிருந்து மரத்துவரை, காராமணி, அவரை ஆகியவை அடங்கிய பயறு தொகுப்பும் விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைக்க உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.அனைத்து மாவட்டத்திலும் இந்த காய்கறி விதை தொகுப்பு, பழத்தொகுப்பு மற்றும் வேளாண்மை துறையிலிருந்து பயறு தொகுப்பும் அனைத்தும் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. எனவே, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள தோட்டக்கலை மற்றும் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும்.விவசாயிகள் tnagrisnet.tn.gov.inமற்றும் tnhorticulture.gov.inஆகிய இணையதளங்கள், உழவர் செயலி ஆகியவற்றின் மூலம் பதிவு செய்து பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை