கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 32 வாகனங்கள் வரும் 30ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் 4 சக்கர வாகனங்கள் நான்கும், ஒரு மூன்று சக்கர வாகனம், 27 இரு சக்கர வாகனங்கள் என 32 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 30 ம் தேதி காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 1000, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டும். முன் வைப்பு தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் முழு தொகையையும் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். வாகன உரிமையாளர் ஏலத்திற்கு முந்தைய தேதியிலும் அல்லது ஏலத்தில் கலந்து கொள்ளும் நேரத்தில் வந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.