உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேலா கார்த்திகேயன் கார்டன் திறப்பு விழா

வேலா கார்த்திகேயன் கார்டன் திறப்பு விழா

தியாகதுருகம்:தியாகதுருகம் அருகே வேலா கார்த்திகேயன் கார்டன் திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தியாகதுருகம் சேலம் - சென்னை நான்கு வழிச்சாலை அருகே விருகாவூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேலா கார்த்திகேயன் கார்டன் திறப்பு விழா நடந்தது. தொழிலதிபர் வேலாயுதம் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், சரவணன், முரளி பாபு, கருணாகரன், கோவி முருகன் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் முருகன் பங்கேற்று மனைப் பிரிவுகளை திறந்து வைத்தார். திருக்கோவிலுார் நகராட்சி சேர்மன் முருகன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் தேவிமுருகன் ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். குமரவேல், பிரகாஷ், விஜயா முத்துசாமி வெண்ணிலா சவுமியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி