உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராம உதவியாளர்  சங்க ஆர்ப்பாட்டம்  

கிராம உதவியாளர்  சங்க ஆர்ப்பாட்டம்  

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் சக்கரவர்த்தி, தண்டபாணி, சந்திரசேகர், மாவட்ட நிர்வாகிகள் வேலுமணி, ரஜினி, பிரபு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அண்ணாமலை வரவேற்றார். முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் கலியபெருமாள், கருப்பன், கோவிந்தராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். கிராம உதவியாளர்களுக்கு தமிழக அரசு நான்காம் நிலைக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ