மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்க மாநாடு
24-Nov-2024
திருக்கோவிலுார் : தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருக்கோவிலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க திருக்கோவிலூர் வட்ட கிளையின் சார்பில், நான்காம் நிலைக்கு இணையான டி கிரேட் ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலுார் தாலுகா அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டத் தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தண்டபாணி தலைமை உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ரஜினி, மாவட்ட துணை செயலாளர் காந்தி, இணை செயலாளர் முருகன், மாவட்ட பிரசார செயலாளர் பாண்டியராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில் திருக்கோவிலுார் வட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
24-Nov-2024