மேலும் செய்திகள்
பைக் திருட்டு..
17-Jan-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த விரியூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.சங்கராபுரம் அடுத்த விரியூர், செல்வ விநாயகர் கோவிலில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி, மாரியம்மன், பாலமுருகன் உள்ளிட்ட சுவாமிகள், தனி சன்னதிகள் உள்ளது.இக்கோவில் திருப்பணி முடிந்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜை, வேள்வி பூஜை, கணபதி ேஹாமம், கோ பூஜை வழிபாடுகள் நடந்தது.தொடர்ந்து காலை யாக சாலையில் இருந்து கலசங்கள் புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விமான கலசத்தில் ஊற்றி, கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
17-Jan-2025