உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: தச்சூர் சேமிப்புக் கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சேமிப்புக் கிடங்கில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு என பல்வேறு கால இடைவெளிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த் நேற்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி தாசில்தார் பசுபதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை