உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீர்த்தம் என கூறி பூசாரி கொடுத்த நீர்: 6 பேர் அட்மிட்

தீர்த்தம் என கூறி பூசாரி கொடுத்த நீர்: 6 பேர் அட்மிட்

சின்னசேலம்:சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் துளசி மகன் முரளி, 45. ஆன்மிகம் மற்றும் குறி சொல்லும் வேலை செய்து வந்த இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த அமகளத்துார் கிராமத்தைச் சேர்ந்த மர வியாபாரி கணேசன், 67, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதையொட்டி, 15 ஆண்டிற்கு முன் அமகளத்துார் கிராமத்திற்கு வந்த முரளியை, கணேசன் தனக்கு சொந்தமான இடத்தில் தங்க வைத்தார். அங்கு, அவர் அங்காளம்மன் கோவில் அமைத்து, அங்கேயே தங்கி, அருள் வாக்கு கூறி வந்தார்; மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்தார்.இதற்காக அவர், கணேசன் உள்ளிட்ட பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடனை திருப்பிக் கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வழக்கம் போல முரளி, மார்கழி மாத சிறப்பு பூஜை செய்ததாகக் கூறி கணேசன், அவரது மனைவி ராசாம்மாள், 60, மகன்கள் முத்தையன், 38, கண்ணன், 34. முரளியின் உதவியாளர் சுப்ரமணி மகன் ராமமூர்த்தி, 35, ஆகியோருக்கு, சுவாமி அணிகலன்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ரசாயன பவுடர் கலந்த நீரை, தீர்த்தம் என கூறி கொடுத்தார்; அவரும் குடித்தார்.இதை, தன் நண்பர்களுக்கு போனில் கூறினார். அதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின்படி, முரளி மற்றும் கணேசன் உள்ளிட்ட ஆறு பேரையும் சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முரளி ஐ.சி.யு., வார்டில் சிகிச்சை பெறுகிறார்.கீழக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை