உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாவளம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல்

பாவளம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், கழிவு நீர் கால்வாய் அமைத்து தரக்கோரியும் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.சங்கராபுரம் ஒன்றியம், பூட்டை ஊராட்சியைச் சேர்ந்தது பாவளம் கிராமம். இந்த கிராமத்தில் 3000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், கழிவுநீர் கால்வாய் வசதியும் இல்லை.இந்த 2 கோரிக்கைகள் குறித்து ஊராட்சி தலைவரிடம் பொது மக்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மா.கம்யூ., கட்சியினர் நேற்று மதியம் 1:00 மணியளவில் பாவளம் பஸ் நிறுத்தம் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், கிராமத்தில் குடிநீர், கழிவுநிர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம்.அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை.பூட்டை ஊராட்சியிலிருந்து பாவளத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் சாலை மறியல் 2:30 மணியளவில் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ