அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் நாளான நேற்று மாணவர்களை பூ மற்றும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 2025-26ம் கல்வியாண்டிற்கு வரவேற்கும் நிகழ்ச்சியாக நேற்று மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.