உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  முதல்வருக்கு 35 கிராமிய கலையுடன் வரவேற்பு

 முதல்வருக்கு 35 கிராமிய கலையுடன் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, 35 வகை கிராமிய கலையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சாலையோரமாக பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பரத நாட்டியம், கிராமிய நடனம், செண்டை மேளம், நாதஸ்வர கச்சேரி உட்பட 35 வகையான கலை நிகழ்ச்சிகள் மூலம் வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 வயது சிறுமிக்கு ஆணை கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராமத்தில், தாய் மற்றும் தந்தையை இழந்து பாட்டி ஆதரவில் 3ம் வகுப்பு படிக்கும் சுபிக் ஷா என்ற 8 வயது சிறுமிக்கு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் அன்பு க்கரங்கள் திட்டத்தில் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் விழா மேடையில் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் அடுத்த 10 வருடத்திற்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை சிறுமி சுபிக் ஷாவிற்கு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை