உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி பூங்குழலி,24; இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி வீட்டிலிருந்த மனைவி பூங்குழலி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மனைவி பூங்குழலியை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் அய்யப்பன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !