உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேகத்தடை அமைக்கப்படுமா?   

வேகத்தடை அமைக்கப்படுமா?   

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இச்சாலை  வாகன போக்குவரத்து மிகுதியான சாலையாக திகழ்கிறது. சில நேரங்களில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் போது மாணவர்கள் மதிய உணவு இடைவேளை நேரங்களில் அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றனர். அதிகவேகமாக செல்லும் வாகனங்களினால் விபத்துகள் ஏற்படும் நிலையால் மாணவர்கள் அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !