மேலும் செய்திகள்
லாரி மோதி தொழிலாளி பலி
12-Dec-2024
சின்னசேலம்: கூகையூர் கிராமத்தில் மாமனார் கண்டித்ததால் பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.கீழ்குப்பம் அடுத்த குகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி நிலா 24, இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலா 6 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். இது குறித்து அவரது மாமனார் அழகப்பன் என்பவர் நிலாவை கண்டித்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த நிலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12-Dec-2024