மேலும் செய்திகள்
பைக் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
30-Sep-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே தவறி கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த அணைக்கரைகோட்டாலத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மனைவி ரீத்தாமேரி, 40; விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 27ம் தேதி பகல் 1.30 மணிக்கு நிலத்தில் இருந்து புல்கட்டு துாக்கி கொண்டு சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முதல் உதவிசிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக் குறிச்சி போலீசார் விசா ரித்து வருகின்றனர்.
30-Sep-2025