மேலும் செய்திகள்
காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி
10-Oct-2025
வயல் வெளியில் வாலிபர் சடலம் மீட்பு
26-Sep-2025
திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண் கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த கீழக்குப்பம் வேலுார் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர் மனைவி மகேஸ்வரி, 40; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கால்நடைக்கு புல் அறுக்க சென்றார்.மகேஸ்வரி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் விவசாய நிலத்தில் தேடினர்.அப்போது கழுத்தில் ரத்த காயங்களுடன் மகேஸ்வரி இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்பவம் குறித்து திருநாவலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேஸ்வரியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து பெண் கொலை செய்யப்பட்டார என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-Oct-2025
26-Sep-2025