உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஸ்சில் பெண்ணிடம் கம்மல் திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் கம்மல் திருட்டு

சங்கராபுரம்: சங்கராபுரத்திற்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் 3 கிராம் கம்மல் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆரகளூரைச் சேர்ந்த ராஜராஜன் மனைவி செல்வி, 27; இவர், நேற்று சங்கராபுரத்தில் உள்ள தனது நாத்தனார் வைதேகியை பார்க்க வந்தார். வழியில் கள்ளக்குறிச்சி ஏ.வி.ஆர்., நகை கடையில் குழந்தைக்கு 3 கிராம் கம்மல் வாங்கிக்கொண்டு பஸ்சில் சங்கராபுரம் வந்தார். சங்கராபுரம் வந்து பார்த்தபோது கைப்பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை