உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்ற பெண்கள் கைது

மது பாட்டில் விற்ற பெண்கள் கைது

சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் மதுபாட்டில் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் நேற்று சாராய சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரை மனைவி கல்யாணி,42; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 7 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தார். இதேபோல் சங்கராபுரத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றதாக சங்கராபுரம் முருகேசன் மனைவி வள்ளி, 55; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 8 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை