மேலும் செய்திகள்
கிணற்றில் மூழ்கி முதியவர் பலி
15-Mar-2025
சின்னசேலம் : சின்னசேலம் வாசவி மகாலில் வாசவி, வனிதா கிளப் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி திருமணமான பெண்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு சமையல் கலை போட்டி மற்றும் மாணவிகளுக்கு கையெழுத்து போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.போட்டிகளை வாசவி, வனிதா கிளப் நிர்வாகிகள் ஜெயலட்சுமி, பத்மா, ரேவதி நடத்தினர். போட்டியின் நடுவர்களாக அகிலா, அபிநயா, கோபிகா ஆகியோர் செயல்பட்டனர். விழாவில் ஆர்ய வைசிய பெண்கள் பலர் பங்கேற்றனர்.
15-Mar-2025