உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

சின்னசேலம்; வீ.கூட்ரோடு பகுதியில் லாரி மோதிய விபத்தில் வட மாநில கூலி தொழிலாளி பரிதாபமாக இருந்தார்.பீகார் மாநிலம், ஜகனாவாட் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியேந்திர மஞ்சி 50, இவர் வாசுதேவனுார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் மில்லில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 10 ம் தேதி மாலை 4.30 மணி அளவில் வீ. கூட்ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சின்னசேலம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகன் குமரவேல் 37, என்பவர் ஓட்டி வந்த லாரி சத்தியேந்திர மஞ்சி மீது மோதி. அவர் அதே இடத்தில் இறந்தார்.தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சத்தியேந்திரமஞ்சிவின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ