மேலும் செய்திகள்
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
15-Jul-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. கள்ளக்குறிச்சி பிரசவ வார்டு அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி செயலாளர் பிரகாஷ், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் உமா, புவனேஸ்வரி, ராதா முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க பொருளாளர் முருகன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பவானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அரசு மருத்துவக்கல்லுாரியில் குழந்தை பெற்ற தாய்கள் 170 பேர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தைகளுக்கான புத்தாடை தொகுப்பு வழங்கப்பட்டது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) செந்தில்குமார், துணை ஆளுனர் மூர்த்தி, நிர்வாகிகள் முத்துசாமி, எத்திராஜ், ஆதிகேசவன், ஞானராஜ், மருத்துவக்கல்லுாரி கண்காணிப்பாளர் பழமலை, டாக்டர்கள் பொற் செல்வி, முத்துக்குமார், இணை பேராசிரியர்கள் பாலமுருகன், நித்யா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். டாக்டர் சங்கர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். குழந்தைகள் நல டாக்டர் செந்தில்ராஜா நன்றி கூறினார்.
15-Jul-2025