மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம்
07-Jun-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி பேரணியை துவக்கினார். ஆசிரியர்கள் குமார், ஏழுமலை, சுரேஷ், இளையராஜா, ராமகிருஷ்ணன், பாலமுருகன், சுரேஷ், சம்சாத்பேகம் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் சவுந்தரராஜன் வரவேற்றார். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி மரக்கன்றுகளை வழங்கினார். உதவி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
07-Jun-2025