மேலும் செய்திகள்
டாடா ஏஸ் வாகனம் மோதி பெண் பலி
28-May-2025
கள்ளக்குறிச்சி; பொற்படாக்குறிச்சி ஏரியில் மூழ்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தமிழன்,26; பி.ஏ., பி.எட்., பட்டதாரி. இவர் கடந்த மே மாதம் 22ம் தேதி குளிப்பதற்காக பொற்படாக்குறிச்சி ஏரிக்கு சென்றார். அப்போது, கால் சேற்றில் சிக்கியதால், வெளியே வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கினார். உடன், அங்கிருந்த சின்ராசு என்பவர் தண்ணீரில் மூழ்கியவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். தகவலறிந்த குடும்பத்தினர் செந்தமிழனை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
28-May-2025