உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே நடந்த வாலிபர் இறந்தார்.கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர், 34; விவசாய தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பினார்.பொட்டியம் சாலையில் ஊத்துஓடை அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தடுப்புக்கட்டையின் மீது மோதி படுகாயம் அடைந்தார்.உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ