மேலும் செய்திகள்
ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
05-Jun-2025
ரிஷிவந்தியம்: பாவந்துாரில் கோவில் திருவிழாவிற்கு 'சீரியல் லைட்' அமைக்கும் பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் பெரியசாமி, 20; தந்தை புஷ்பராஜ் கடந்த 7 வருடத்திற்கு முன் உயிரிழந்ததால், பெரியசாமி அவ்வப்போது கிடைக்கும் வேலையினை செய்து வருகிறார். இந்நிலையில், ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி 'சீரியல் லைட்' அமைக்கும் பணியில் பெரியசாமி நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டார்.அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பெரியசாமி துாக்கி வீசப்பட்டார். உடன், அவருடன் பணிபுரிபவர்கள் பலத்த காயமடைந்த பெரியசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பெரியசாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
05-Jun-2025