உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மோதி வாலிபர் காயம்

பைக் மோதி வாலிபர் காயம்

உளுந்தூர்பேட்டை: அடையாளம் தெரியாத பைக் மோதியதில் வாலிபர் படுகாயமடைந்தார். உளுந்தூர்பேட்டை அடுத்த பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் வெங்கடேசன், 38; இவர் கடந்த 16ம் தேதி இரவு 7:00 மணியளவில் டீ குடிப்பதற்காக பண்ருட்டி - கெடிலம் சாலை பெரியப்பட்டு தனியார் கல்லூரி அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத பைக் வெங்கடேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !