உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி

2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி

திருத்தணி : திருத்தணி முருகப்பா நகரில் வசித்து வருபவர்பிரேம்குமார். இவர் வசித்து வரும் வீட்டில் கடந்த 6ம் தேதி மூன்று இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில், பிரேம்குமார்,அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அவரது 1-2 வயது மகன்களும் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டனர். இதில், குழந்தைகள் நவிலன், மிதுலன் இருவரும் உயிரிழந்தனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா, நேற்று முன்தினம் இறந்தார். பிரேம்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை