மேலும் செய்திகள்
பச்சையப்பன் கல்லுாரி ஹேண்ட் பாலில் சாம்பியன்
01-Sep-2024
காஞ்சிபுரம்:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில், செப்.,21ம் தேதி, மாபெரும் வேலை வாய்ப்பு முகாம், காஞ்சிபுரத்தில் நடக்க உள்ளது.காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம், காலை 9:30 மணி முதல், மாலை 3:00 மணி வரையில் நடைபெற உள்ளது.இதில், 18 - 35 வயது வரை இருக்கும், பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் போட்டோவுடன் பங்கு பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.
01-Sep-2024