மேலும் செய்திகள்
தலையில் காயங்களுடன் செங்கை நபர் உயிரிழப்பு
31-Aug-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர்- - காஞ்சிபுரம் சாலையில், மருத்துவன்பாடி கூட்டுச்சாலை அருகே, கடந்த 30ம் தேதி, சாலையோரத்தில், அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று கிடந்தது. உத்திரமேரூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்தவர் செங்கல்பட்டு மாவட்டம், மேலமையூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 47; தாம்பரம் ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளி.என தெரியவந்தது.பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 32, என்பவரிடம், ரமேஷ் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அப்பணத்தை திரும்ப கேட்டு, சில மாதங்களாக கார்த்திக் நெருக்கடி கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை திரும்ப கொடுக்க இயலாமல் ரமேஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.இதனால், ஆத்திரம் அடைந்த கார்த்திக், மனைவி தமிழ்செல்வி, 37 மற்றும் நண்பர், சிவா, 32, ஆகியோருடன் சேர்ந்து, ரமேஷை தீர்த்து கட்ட தீர்மானித்தனர்.அதன்படி, கடந்த 30ம் தேதி செங்கல்பட்டு அருகே, ரமேஷை கொலை செய்து பின், அவரது உடலை ஆட்டோவில் கொண்டு வந்து, உத்திரமேரூர் அடுத்த மருத்துவன்பாடி கூட்டுச்சாலை அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர்.இதையடுத்து, கொலை குற்றவாளிகள் கார்த்திக், தமிழ்ச்செல்வி, சிவா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்னர்,இவ்வாறு போலீசார் கூறினர்.
31-Aug-2024