உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கடிகாரம் இல்லாத மணிக்கூண்டு; மாநகராட்சி சீரமைக்குமா?

கடிகாரம் இல்லாத மணிக்கூண்டு; மாநகராட்சி சீரமைக்குமா?

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், 1998ல், நான்கு கடிகாரங்களுடன் மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. இதனால், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்பயணியர் மட்டுமின்றி, நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் மணிக்கூண்டில் உள்ள கடிகாரத்தில் நேரத்தை அறிந்துகொண்டனர்.இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் மணிக்கூண்டில் இருந்த நான்கு கடிகாரமும் பழுதடைந்தது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது.இருப்பினும், ஒரே மாதத்தில் மீண்டும் அனைத்து கடிகாரமும்பழுதடைந்து, திசைக்கு ஒரு நேரத்தை காட்டியது.தற்போது கடிகாரம் இல்லாமல் மணிக்கூண்டுமட்டும் காலியாக உள்ளது. எனவே, மணிக் கூண்டில் நான்கு கடிகாரத்தையும் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்கவேண்டும்.- எஸ்.முத்துகுமார்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை