உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதான குழாயில் உடைப்பு குடிநீரை வீணாக்கும் மாநகராட்சி

பிரதான குழாயில் உடைப்பு குடிநீரை வீணாக்கும் மாநகராட்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட ‛பைப்லைன்' வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், பெரிய காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதி, ஆதி காமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் நுழைவாயில் அருகில், ஆறு மாதத்திற்கு முன், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.இதனால், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் அரிப்பு காரணமாக சாலை சேதமடைந்துள்ளதால், இச்சாலையில் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, செங்கழுநீரோடை வீதியில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவும், சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் ஆறு மாதங்களாக மெத்தனம் காட்டி வருவதால், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ