உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மதுக்கூடமாக மாறிய கால்நடை மருத்துமனை

மதுக்கூடமாக மாறிய கால்நடை மருத்துமனை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார், பட்டுநுால்சத்திரம் பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையை ஒட்டி, கால்நடை மருத்துமனை இயங்கி வருகிறது. இங்கு, ஸ்ரீபெரும்புதுார், போந்துார், பிள்ளைப்பாக்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் ஏராளமானோர் கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர்.கடந்த 1965ல் கட்டப்பட்ட இந்த மருத்துமனை கட்டடம் சேதமடைந்ததை அடுத்து, அதே பகுதியில் கடந்தாண்டு புதிய மருத்துமனை கட்டப்பட்டது. தற்போது, புதிய கட்டடத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த சமூக விரோதிகள் சிலர், இரவு நேரங்களில் பழைய மருத்துவமனை கட்டடத்தில் அமர்ந்து, மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.அங்கு மது அருந்துபவர்கள் போதையில் காலி மது பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். இதனால், கால்நடைகளை சிகிச்சைகாக அழைந்து வருபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அதோடு, மருத்துவமனை வளாகத்தில் உடைந்துள்ள பாட்டில் சில்லு, சிகிச்சைக்கு வரும் கால்நடைகளின் பாதங்களை பதம்பார்க்கிறது.எனவே, பயன்பாடு இல்லாமல் உள்ள பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, வெளி நபர்கள் உள்ளே வருவதை தடுக்க, மருத்துமனை நுழைவாயிலில் இரும்பு கேட் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ