உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 8 மாதங்களுக்கு பின் செப்.3ல் மாநகராட்சி கூட்டம் 96 தீர்மானங்கள் நிறைவேற்ற ஏற்பாடு

8 மாதங்களுக்கு பின் செப்.3ல் மாநகராட்சி கூட்டம் 96 தீர்மானங்கள் நிறைவேற்ற ஏற்பாடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, தி.மு.க.,- - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும், கடந்தாண்டு இறுதியில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்திற்கு பின், பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரு மாதங்களில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கவுன்சிலர்கள் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால், அந்த இரு மாதங்களிலும் கூட்டம் நடைபெறவில்லை. ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், மாநகராட்சி கூட்டம் அப்போதும் நடைபெறவில்லை.ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த உடன், மாநகராட்சி கூட்டம் நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, 33 கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கினர்.இதையடுத்து, மாநகராட்சியில் பலகட்ட பிரச்னைகள் ஜூன், ஜூலையில் நடந்தது. ஜூலை 29ல், மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடந்தது. இதில், எந்த கவுன்சிலரும் பங்கேற்காததால், தீர்மானம் தோல்வியடைந்தது.ஒரு வழியாக, ஆகஸ்ட் மாதம் மாநகராட்சி கூட்டம் நடக்கும் என, நகரவாசிகள், மாநகராட்சி ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், கவுன்சிலர்களிடையே மேயர் தரப்பு சமாதான பேச்சு நடத்தியதில், ஆகஸ்ட் மாதமும் கடந்தது.இதையடுத்து, செப்.3ம் தேதி, மாநகராட்சி கூட்டம் இறுதி செய்யப்பட்டு, தீர்மான புத்தகம், அனைத்து கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.மொத்தம், 96 தீர்மானங்கள் இம்முறை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். 600 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்டமும், பாதாள சாக்கடை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான முக்கிய தீர்மானங்களும் இதில் நிறைவேற்றப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ