உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேக ஆண்டு விழா

விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேக ஆண்டு விழா

காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், கே.எம்.வி., நகரில் கடந்த ஆண்டு புதிதாக கற்பக விநாயகர் கோவில் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு செப்., 8ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இதையொட்டி முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை, சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.இதேபோல, காஞ்சிபுரம் மின் நகர் பல்லவன் சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக 9ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதில், காலை 8:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு உற்சவ மூர்ததி வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை