உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விநாயகர் சிலைகள் தயாரிப்பு காஞ்சியில் கலைஞர்கள் மும்முரம்

விநாயகர் சிலைகள் தயாரிப்பு காஞ்சியில் கலைஞர்கள் மும்முரம்

காஞ்சிபுரம்:விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெரு, கன்னிகாபுரம், நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரிதெருவைச் சேர்ந்தவிநாயகர் சிலை தயாரிப்பாளர் டி.சந்துரு கூறியதாவது:ஒரு வாரமாக விநாயகர் சிலை தயாரிப்பு பணியை துவக்கியுள்ளோம்.காஞ்சிபுரத்தில் 5 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல், 10 அடி உயரம் உள்ள சிலை, 22,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.நடப்பாண்டு புதுவரவாக, சிவ பெருமானைப்போன்று ஜடை முடியில் கங்கையும், சந்திரனும், சிம்மம் மற்றும் ரிஷப வாகனத்தில் விநாயகர் அமர்ந்திருப்பதுபோன்று சிலையை புதிதாக வடிவமைத்துள்ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !