அரசு பள்ளியில் கோல்போஸ்ட் அமையுமா?
குன்றத்துார்: குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள சோமங்கலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியின் மைதானத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், உள்ளூர் இளைஞர்கள் காலை, மாலை நேரத்தில் கால்பந்து விளையாடி வந்தனர். இதற்காக மைதானத்தின் நான்கு கோல்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கோல்போஸ்டின் அடிப்பகுதி துருப்பிடித்து உடைந்ததால், நான்கு போஸ்டுகளும் அகற்றப்பட்டுவிட்டன. இதனால், மாணவர்கள் இரண்டு ஆண்டுகளாக கால்பந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.