உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.51 லட்சத்தில் கால்வாய் பணி துவக்கம்

ரூ.51 லட்சத்தில் கால்வாய் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி கணக்கர் தெருவில் 7 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய் பணி, திருப்புட்குழி ஊராட்சியில், 20 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்ற நடந்தது.மேலும், 8 லட்சத்தில் கால்வாய் பணி, தாமல் ஊராட்சியில் 6.5 லட்சத்தில்ல் கால்வாய் பணி, மேல் ஒட்டிவாக்கம் ஊராட்சி புதுாரில் 9.65 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி என, மொத்தம் 51.15 லட்சம் ரூபாய் செலவில் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.இதில், காஞ்சிபுரம் தி.முக.., - எம்.எல்.ஏ., எழிலரசன் அடிக்கல் நாட்டி, சிமென்ட் சாலை மற்றும் கால்வாய் கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு சேர்மன் மலர் கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை