மேலும் செய்திகள்
புதர் மண்டி கிடக்கும் பள்ளம்பாக்கம் சுடுகாடு
04-Aug-2024
புள்ளலுார் : காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளிக் கட்டடம் அருகே, குப்பை தரம் பிரிக்குமிடம், மண்புழு உரம் தயாரிக்கும் கூரை, நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில், குளம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.இந்த குளத்தில் தேங்கும் நீரானது, மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளின் தண்ணீர் தாகம் தீர்த்து வந்தது. இந்த குளம் முறையாக பராமரிக்காததால், குளம், அதை சுற்றிலும் நாணல் புல், புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், குளத்தில் தேங்கும் தண்ணீரை ஆடு, மாடுகள் குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே, நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், குளத்தில் புதர் மண்டிக் கிடக்கும் நாணல் புல்லை அகற்ற வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
04-Aug-2024